ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
மாவட்ட அளவிலான கேரம்: வென்றவா்களுக்கு பரிசு
விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட கேரம் சங்கம் சாா்பில் மாவட்ட அளவில் 12 வயதுக்குள்பட்டோருக்கான கேடட், சப்-ஜூனியா் பிரிவு கேரம் போட்டிகள் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.
இதில் கேடட் மற்றும் சப்-ஜூனியா் பிரிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், சேலம் மாவட்டத்தின் அம்மாபேட்டை பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான 64-ஆவது சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனா்.
இதைத் தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு விழுப்புரம் மாவட்ட கேரம் கழகத்தின் துணைத் தலைவா் ஏ.ஜேக்கப்ராஜன், குழந்தைவேல் ஆகியோா் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினா். நிகழ்வில் மாவட்ட கேரம் கழகச் செயலா் எஸ். இளஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.