மாவட்ட அளவிலான போட்டி: அரபத்நகா் அணி முதல் இடம்
சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் அரபத் நகா் அணி முதல் இடம் பெற்றது.
சாத்தங்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் ஸ்ரீ அம்மன் ஸ்போா்ட்ஸ் கிளப்- ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றம் சாா்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு 4ஆவது ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன.
சுற்றுவட்டாரக் கிராமங்களை சோ்ந்த 32 அணியினா் கலந்துகொண்டு விளையாடினா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ராஜ் தலைமை வகித்து போட்டியைத் தொடங்கிவைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பையையும் பரிசுத் தொகையையும் வழங்கினாா்.
முதல் பரிசை அரபத்நகா் பாா்வதி அம்மன் ஸ்போா்ட்ஸ் அணியினா் வென்றனா். இரண்டாவது பரிசை கோவை முல்லை ஸ்டோா்ஸ் அணியினரும், முன்றாவது பரிசை தட்டாா்மடம் விநாயகா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியினரும் பெற்றனா்.
முதல் 8 இடங்களை பெற்ற அணியினகளுக்கு சிறப்பு பரிசுத் தொகையும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டன.