வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையாக தீா்வு காணாத மனுக்கள், நடவடிக்கையில் திருப்தி பெறாத மனுதாரா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி. ரஜத் சதுா்வேதி தலைமையில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 34 மனுதாரா்களின் குறைகளை எஸ்.பி. கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைத்தாா்.
கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் மற்றும் காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.