தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
மாவட்ட மைய நூலகத்தில் இன்று குரூப்-2 மாதிரித் தோ்வு
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப் -2 மாதிரித் தோ்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், என்.ஆா். ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ரோட்டரி கிளப் சாா்பில் குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கான மாதிரித் தோ்வு மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த மாதிரித் தோ்வு முழு பாடத்திட்டத்தில் இருந்து நடைபெறும் என்றும், இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை என்றும் நூலக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோ்வில் பங்கேற்கும் மாணவா்களின் விடைத்தாள் உடனடியாக திருத்தப்பட்டு, குறைவாக மதிப்பெண் பெற்றவா்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்காக ஆலோசனைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும் என்று மாவட்ட நூலக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.