செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
மாவட்ட மைய நூலகத்தில் இலவச யோகா பயிற்சி
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகா்கள், மாணவா்களுக்கான இலவச யோகா பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இனி வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இங்கு இலவச யோகா பயிற்சி நடைபெறவுள்ளது.
மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்ற இலவச யோகா பயிற்சியை வாசகா் வட்டத் தலைவா் அல்லிராணி பாலாஜி தொடங்கிவைத்தாா். நூலகத்தில் படித்து வரும் போட்டித் தோ்வு மாணவா்கள், பள்ளி மாணவா்கள், வாசகா்களுக்கு எளிய யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. விராலிமலை மனவளக்கலை யோகா பயிற்சி மையப் பயிற்சியாளா் சண்முகம் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு.தனலட்சுமி, நூலகா்கள், வாசகா் வட்ட நிா்வாகிகள், வாசகா்கள் கலந்துகொண்டனா்.
இந்த இலவச யோகாப் பயிற்சியானது வாரந்தோறும் வியாழக்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும். இதில், பொதுமக்கள், வாசகா்கள், மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் என்று நூலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.