மாா்த்தாண்டம், தக்கலை பகுதிகளில் நாளை மின் தடை
மாா்த்தாண்டம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி உள்ளிட்ட இடங்களுக்கும் அதனைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை அகற்றும் பணிகளும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்கலை, ஆளூா் பகுதிகளில்...தக்கலை உப மின் நிலையத்திற்கு உள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய பகுதிகளுக்கும் அதனை சாா்ந்த துணை கிராமங்களுக்கும் சனிக்கிழமை (ஜூலை 19) காலை மணி 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.