செய்திகள் :

மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்; தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா!

post image

மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாகவும், அணியின் பிரச்னைகளை தவிர்த்து தனிப்பட்ட முறையில் உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் எந்த இடத்தில் நின்றேனோ, அதே இடத்தில்தான் இன்றும் நிற்கிறேன். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையில், சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அணியின் கேப்டனாக இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்தத் தோல்வி மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அணியாக நாங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல, தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்திலும் சில விஷயங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும். சிட்னியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என்றார்.

இதையும் படிக்க: “200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பமே முக்கியம்..! இலங்கை தொடரிலிருந்து கம்மின்ஸ் விலகல்!

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. கம்மின்ஸ் மனைவி பெக்கிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் இலங்கை உடனான் தொடரில் த... மேலும் பார்க்க

ரோஹித் நீக்கப்பட்டாரா? ஓய்வறை விவாதம் குறித்து பேச மறுத்த கம்பீர்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் உண்மை பேசுகிறேன் என கடுமையாக பேசியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் தொடரில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதால் இந்திய ரசிக... மேலும் பார்க்க

சிட்னி டெஸ்ட்: மார்ஷ் நீக்கம், ஆஸி. அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆஸி. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ்நீக்கப்பட்டுள்ளார். மார்ஷுக்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் அறிமுகமாகவிருக்கிறார்... மேலும் பார்க்க

மோதலும் காதலும்..! கான்ஸ்டாஸ் குடும்பத்தினரை சந்தித்த கோலி, பும்ரா!

இந்திய வீரர்கள் கோலி, பும்ரா ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் குடும்பத்தினரைச் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் (19) பும்ரா ஓவரில... மேலும் பார்க்க

பும்ரா மட்டும் இல்லையெனில்... மெக்ராத் கூறியதென்ன?

இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மட்டும் இல்லையெனில் இந்தியா மோசமாக தோற்றிருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத் பாராட்டி பேசியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் 4 போடிகள் முடிவடைந்த நி... மேலும் பார்க்க

ஆஸி.யின் போராட்டத்துக்கு சிட்னியில் பலன் கிடைக்கும்..! அலெக்ஸ் கேரி நம்பிக்கை!

2025ஆம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தேர்வாகியுள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது பார்டர் கவாஸ்கர் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகர... மேலும் பார்க்க