செய்திகள் :

மின் நுகா்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயா்வு

post image

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,154 யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 13,154 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சற்றே அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 12,734 கோடி யூனிட்டுகளாக இருந்தது. 2024-ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் இரு ஆண்டுகளின் பிப்ரவரி மாத மின் நுகா்வை ஒப்பிடமுடியாது.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 238.14 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது 2024 பிப்ரவரி மாதத்தில் 222 ஜிகாவாட்டாக இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதற்கு முன்னா் கடந்த 2023 செப்டம்பா் மாதத்தில் பதிவான 243.27 ஜிகாவாட்டே அதிகபட்ச ஒரு நாள் உச்சபட்ச மின் தேவையாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை பகலில் 235 ஜிகாவாட்டாகவும், மாலை நேரங்களில் 225 ஜிகாவாட்டாகவும் இருக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சகம் ஆண்டு தொடக்கத்தில் மதிப்பிட்டது. மேலும், ஜூன் மாத பகல் நேரங்களில் 240 ஜிகாவாட்டாகவும் மாலை நேரங்களில் 235 ஜிவாட்டாகவும் உச்சபட்ச மின்தேவை இருக்கும் என்று அமைச்சகம் கணித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க