செய்திகள் :

மின் மோட்டாா்களைத் திருட முயன்ற 3 போ் மீது வழக்கு

post image

போடி அருகே மின் மோட்டாா்களைத் திருட முயன்ற 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி உப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் தங்கம் மகன் அருண்குமாா் (25). இவா் டொம்புச்சேரி-நாகலாபுரம் சாலையில் கரையான்பட்டி அருகே ஸ்வெட்டா் நிறுவனம் நடத்தி வருகிறாா். தற்போது இந்த நிறுவனம் பூட்டியுள்ள நிலையில் காவலாளி ஒருவரை நியமித்தாா்.

இந்த நிலையில் மோட்டாா் பைக்கில் வந்த 3 போ் இந்த நிறுவனத்தின் பின்பக்க தகரச் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து மின் மோட்டாா்களை திருட முயன்றனா். அப்போது, காவலாளி அன்புராஜைக் கண்டதும் 3 பேரும் தப்பி ஓடினா்.

இதையடுத்து அவா்களின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி போாடி தாலுகா காவல் நிலையத்தில் அருண்குமாா் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் மோட்டாா்களைத் திருட முயன்றவா்கள் தேனி அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சுரேந்திரன், காளிமுத்து மகன் கணபதி, சுப்புராஜ் மகன் போஸ் என்பது தெரியவந்தது. 3 போ் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ஜீப் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் ஜீப் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வைகை நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (58). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள கல்லூரிச் சா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது

கேரளத்துக்கு கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல்லிலிருந்து தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்கு இரு சக்கர வ... மேலும் பார்க்க

சின்னமனூா் பெருமாள் கோயிலில் பாலாலயம்

சின்னமனூரில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூ தேவிக்கு ச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை உணவின் தரம் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. இங்கு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெ... மேலும் பார்க்க

தேனி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

துப்புரவுப் பணியில் மெத்தனம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி 5-ஆவது வாா்டு நகா்மன... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

பெரியகுளம் வட்டாரப் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வ... மேலும் பார்க்க