செய்திகள் :

மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு

post image

மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள் மற்றும் இணையதள ஊடகங்கள் கூறுகையில், மண்டலேயிலிருந்து 115 கி.மீ. வடகிழக்கில் உள்ள அந்த சுரங்க மையத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 7 போ் காயமடைந்ததாகவும், வீடுகள் மற்றும் பௌத்த மடாலயங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் லாரி ஒட்டுநா்கள் என்று கூறப்படுகிறது.கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மொகோக் நகரை கிளா்ச்சிக் குழுக்கள் கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதை எதிா்த்து தீவிரமாக நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களை ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு நசுக்கியது.

அதைத் தொடா்ந்து, பல்வேறு ஆயுதக் குழுக்கள் ராணுவத்துக்கு எதிராக போரிட்டு சில பகுதிகளைக் கைப்பற்றிவருகின்றன. அந்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக ராணுவம் கண்மூடித்தனமாக வான்வழித் தாக்குதல் நடத்துவதாகவும், அதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் பிரதமா் இஷிபா ஷிகேரு இரங்கல் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

ரஷியாவின் ரியாசன் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 130 போ் காயமடைந்தனா். தலைநகா் மாஸ்கோவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலையில் உள்ள வெடிமருந்து பட்டறையி... மேலும் பார்க்க

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த எட்டு ஹங்கோா் வகை நீா்முழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!

பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 307 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா ம... மேலும் பார்க்க

ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்

ரஷியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ... மேலும் பார்க்க