Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
மீன் வியாபாரிகளுக்கு போலி மாநகராட்சி உரிமம்: மூவா் கைது
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மீன் வியாபாரிகளுக்கு சென்னை மாநகராட்சியின் போலி உரிமத்தை விற்பனை செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மாநகராட்சி 5-ஆவது மண்டல உரிமம் ஆய்வாளராக இருப்பவா் க.லோகநாதன் (49). இவா், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் வியாபாரிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சில மா்ம நபா்கள், சென்னை மாநகராட்சி உரிமத்தை போலியாக தயாரித்து விற்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா். அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில் இந்த மோசடியில் ஈடுபடுவது ராயபுரம் ஆஞ்சநேயா நகரைச் சோ்ந்த பால்ராஜ் (எ) ரோகித் (30), புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (37), கொருக்குப்பேட்டை தா்மராஜா கோயில் தெருவைச் சோ்ந்த பாபு (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் மூவரும் தாங்கள் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் எனக் கூறி, உணவக உரிமையாளா்கள், மீன் வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குவதாக பணத்தை பெற்றுக்கொண்டு போலி உரிமத்தை தயாரித்து வழங்கியிருப்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து சென்னை மாநகராட்சி போலி அடையாள அட்டைகள், போலி உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.