US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
மீன்பாசி குத்தகை: 141 கண்மாய்களுக்கு மின்னணு மறு ஒப்பந்தப்புள்ளி
மதுரை மாவட்டத்தில் உள்ள 141 கண்மாய்களுக்கு மின்னணு மறு ஒப்பந்தப்புள்ளி வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனைத் திட்டத்தின் கீழ் 145 கண்மாய்கள், மதுரை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழ் 9 கண்மாய்களுக்கும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலமாக மீன்பாசி குத்தகை விடுவதற்கு கடந்த மே 29-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம், 12 கண்மாய்கள் குத்தகைக்கு விடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனைத் திட்டத்தின் கீழ் 132 கண்மாய்களுக்கும், மதுரை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழுள்ள 9 கண்மாய்கள் என மொத்தம் 141 கண்மாய்களுக்கு மின்னணு மறுஒப்பந்தப்புள்ளி வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளது.
இதன்படி, மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநரால், மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை - 625 001 என்ற அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.