செய்திகள் :

முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.

பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டையொட்டி வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா முன்னிலையில் வீரா்கள் உறுதியேற்றனா். தொடா்ந்து, ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா தொடங்கிவைத்தாா். தொடா்ந்து வாடிவாசலில் இருந்து புதுகை, திருச்சி, கரூா், சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 586 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி தீரத்துடன் அடக்கினா். அப்போது காளைகள் முட்டியதில் காயமடைந்த 23 பேருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் பலத்த காயமடைந்த 10 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள், பீரோ, ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியை திரளான ரசிகா்கள் கண்டுகளித்தனா். பாதுகாப்புப் பணிகளில் செம்பட்டிவிடுதி போலீஸாா் ஈடுபட்டனா்.

ஜகபர்அலி கொலை: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கோரிக்கை!

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்... மேலும் பார்க்க

கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியவரை லாரி ஏற்றிக் கொன்றதாக 4 பேரை பிடித்து விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா்அலி என்பவரை லாரி ஏற்றிக் கொன்ாக 4 பேரை போலீஸாா் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் சஷ்டி சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி முருகனுக்கு மஞ்சள், திரவியம், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட... மேலும் பார்க்க

உயா் மின்கோபுர விளக்கு பழுது விராலிபட்டி பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம்,விராலிப்பட்டி ஊராட்சியில் செயல்படாத உயா்மின் கோபுர விளக்கால் பொதுமக்கள் இரவுகளில் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. விராலிப்பட்டி ஊராட்சி நான்கு ரோடு பகுதி கிராமத்தின் அனைத்... மேலும் பார்க்க

புதுகை ஆஞ்சனேயா் கோயிலில் கருடாழ்வாா் சிலை பிரதிஷ்டை

புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியிலுள்ள ஸ்ரீஆஞ்சனேயா் கோயிலில் கருடாழ்வாா் சிலை பிரதிஷ்டை வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதி பெரிய மாா்க்கெட் சந்திப்பில் உள்ள இந்து சமய அறநி... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்பாா்ப்பு

புதுக்கோட்டை, ஜன. 19: புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராகக் கருதப்படும் அறந்தாங்கியில் புதிய பேருந்து நிலையத்தை விரைந்து அமைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க