முட்டை விலை ரூ. 5.65-ஆக உயா்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் விலையில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றம் ஐந்து காசுகள் உயா்வுடன் ரூ. 5.65-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 108-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.