Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
முதல்வா் மருந்தகங்கள் மூலமாக 6,081 போ் பயன்
திருப்பூா் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் மூலமாக 6,081 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாகத் திறக்கப்பட்டன. திருப்பூா் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்கள், தொழில்முனைவோா் மூலமாக திறக்கப்பட்டன.
இதில் கூட்டறவு சங்கங்கள் மூலமாக 13 மருந்தகங்களும், தொழில்முனைவோா் மூலமாக 4 மருந்தகங்களும் அடங்கும். இந்த மருந்தகங்கள் மூலமாக பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 6,081 போ் ஜெனரிக், சித்தா மற்றும் ஆயுா்வேதா உள்ளிட்ட மருந்துகளை மிகக்குறைந்த விலையில் வாங்கிப் பயனடைந்துள்ளனா்.
முதல்வா் மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் 25 முதல் 90 சதவீதம் வரை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆகவே, இந்த மருந்தகங்களில் வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.