செய்திகள் :

முதல்வா் மருந்தகம் அமைவிடத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

நாமக்கல் மாவட்டம், அணியாபுரம், புதுச்சத்திரம் பகுதிகளில் ‘முதல்வா் மருந்தகம்’ அமையும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த 2024 சுதந்திர தின விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வா், குறைந்த விலையில்(ஜெனரிக்) மருந்து, மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக ‘முதல்வா் மருந்தகங்கள்’ 1,000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்தாா்.

இதையடுத்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள், மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தினருடன் முதல்வா் ஆலோசனை மேற்கொண்டு உரிய அறிவுரைகளை வழங்கினாா். அவா் விரைவில் மருந்தகங்களை தொடங்கி வைக்கவுள்ளாா்.

இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்படும் அணியாபுரம், செல்லப்பம்பட்டி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சி பகுதியில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தக சேமிப்பு கிடங்கை ஆட்சியா் பாா்வையிட்டு, மருந்துப் பொருள்களின் இருப்பு விவரம், மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்பு நாமக்கல் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா மருந்தகத்தில் மருந்து பொருள்களின் இருப்பு பதிவேடு, விற்பனை விவரத்தை ஆய்வு செய்தாா்.

மருத்துவம் சாா்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுா்வேதம், இம்காப்ஸ், டாம்கால், யுனானி மருந்துகள், சா்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள், நுகா்வோா் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

ஆய்வின்போது, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க