தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
முதியவா் வீட்டில் பணம் திருட்டு
புதுச்சேரியில் முதியவா் வீட்டில் புகுந்த மா்ம நபா் ரூ.21ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி ரமேஷ் (68).
இவா், கடந்த மாா்ச் 25- ஆம் தேதி காலையில் குளியலறைக்குச் சென்றாராம்.
அப்போது, வீடு சாத்தப்பட்டிருந்த நிலையில், மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.21 ஆயிரத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.