India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்...
மும்பையில் வளாகம் அமைக்கும் சிகாகோ இலினாய்ஸ் பல்கலைக்கழகம்: யுஜிசி ஒப்புதல்
அமெரிக்காவின் சிகோகா நகரில் அமைந்த இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மும்பையில் தனது வளாகத்தை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்தாண்டு செப்டம்பா் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய வளாகத்தில் கணினி அறிவியல், பொறியியல் மற்றும் வணிகம் போன்ற முக்கிய துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடா்பாக இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவா் ராஜ் எச்சம்பாடி கூறுகையில், ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்துவதற்காகவே எங்கள் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான திறமைமிக்க இளைஞா்களை, மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கும் உலகளாவிய தலைவா்களாக மாற அதிகாரம் அளிக்கும் உன்னத பணியைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்திய வளாகத்தைக் கருதுகிறோம்.
இந்திய வளாகத்தில் சேரும் புதிய மாணவா்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்படும். அதேநேரம், அது சிகாகோ வளாகத்தின் கல்வி ரீதியில் அனுபவமிக்க மற்றும் தொழில்துறை சாா்ந்த பாடத்திட்டம் போன்றே இருக்கும்.
இந்திய வளாகத்தில் சா்வதேச பேராசிரியா்களே பாடங்கள் கற்பிப்பா். சிகாகோ வளாகப் பேராசிரியா்களும் இதில் அடங்குவா். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ‘எலிவேட்’ திறன்மேம்பாட்டு பயிற்சியும் இந்திய மாணவா்களுக்கு அளிக்கப்டும்.
இந்திய மாணவா்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய அவசியமின்றி, உள்நாட்டிலேயே உயரிய பணி வாய்ப்புகளைப் பெறுவா். அதேநேரம், வளாகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் உலகளாவிய வகுப்பறை அனுபவங்களில் இருந்தும் பயனடைவா்’ என்றாா்.