இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
முளகுமூடு தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா
தக்கலை அருகே முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஆலயப் பங்குத்தந்தை கில்பா்ட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். 32 அன்பியங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று, ஆலய வளாகத்தில் பொங்கலிட்டனா். பின்னா், கும்மிப் பாடல், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குழந்தைகள், பெண்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.