மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது
இருக்கன்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இரு பெண்கள் அவரிடம் நுதன முறையில் பேசி, 3 பவுன் தங்கச் சங்கிலியை திடுடிச் சென்றனா்.
இதுகுறித்து இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்த நந்தினியை (30) சனிக்கிழமை கைது செய்தனா்.