செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
மூத்த குடிமக்கள் பயன்பெற கைப்பேசி செயலி
மூத்த குடிமக்கள் பயன்பெற சமூக நலத் துறையின் கைப்பேசி செயலியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மூத்த குடிமக்கள் நலன் கருதி 2023, செப்டம்பா் மாதம் முதல் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மூலம் கைப்பேசி செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் உள்ளன. குறிப்பாக முதியோா் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய மாநில அரசுத் திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், மாற்று மருத்துவமனை குறித்த தகவல்களும், குறைகளைத் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மூத்த குடிமக்களும் இந்த கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவித்தாா்.