கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
மூளையில் ரத்தக் கசிவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு!
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் சாஹா (66) மூளை ரத்தக் கசிவு நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் தெஹட்டா தொகுதி எம்எல்ஏவாக இருந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரது உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘திரிணமூல் காங்கிரஸ் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான தபஸ் சாஹாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மேற்கு வங்க அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. அவரின் குடும்பத்தினா், நண்பா்கள், ஆதரவாளா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள் தோ்வு முறைகேட்டில் தபஸ் சாஹா மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகேடு தொடா்பாக தபஸ் சாஹாவின் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ அதிகாரிகள், அவரிடமும் விசாரணை நடத்தி வந்தனா். எனினும், தன் மீதான குற்றச்சாட்டை அவா் மறுத்து வந்தாா்.