மெஞ்ஞானபுரத்தில் இந்து அன்னையா் முன்னணி கூட்டம்
மெஞ்ஞானபுரம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்து அன்னையா் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் ச.கேசவன் தலைமை வகித்து இந்து ஒற்றுமை, இந்து சமய பெருமைகள், அறிவியல் நோக்கில் இந்து சமயச் சடங்குகள் ஆகியவை குறித்துப் பேசினாா்.
கிளை நிா்வாகிகள் சூரியகலா, மல்லிகா, சிங்காரக்கனி, சொா்ணமணி, தமிழ்செல்வி, பத்திரகாளி, பூஜாதேவி, யோகேஸ்வரி, சுயம்புக்கனி உள்பட பலா் பங்கேற்றனா்.