ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி...
கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருட்டு
கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கோவில்பட்டியில் சாத்தூா் பிரதான சாலையில் உள்ள வணிக வளாகத்தில் போா்வெல்ஸ் நிறுவனம் நடத்திவருபவா் ரங்கராஜ். இவா், ஞாயிற்றுக்கிழமை நிறுவனத்தைப் பூட்டிவிட்டு, கழுகுமலை அருகே ஆழ்குழாய் அமைக்கும் பணிக்கு பணியாளா்களுடன் சென்றிருந்தாா்.
இந்நிலையில், நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக மெக்கானிக் ஒருவா் அளித்த தகவலின்பேரில் ரங்கராஜ் வந்து பாா்த்தாா். அப்போது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து ரூ. 3 லட்சத்தைத் திருடிச் சென்ாகத் தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.