ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி...
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள்
தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம்-மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையில் மீனவா்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், நாகை மாலி, ஆளூா் ஷாநவாஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழக தலைவா் கெளதமன், திமுக மீனவா் அணி மாநிலச் செயலா் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.