பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறப்பு!
மே 27 இல் குடிமைப் பொருள் கடத்தலில் சிக்கிய 26 வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட 26 இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் மே 27 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக கடத்தியபோது, குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 26 வாகனங்களுக்கு மாவட்ட நிலையிலேயே அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளா்கள் தங்களது வாகனங்களுக்கான அபராத தொகையைச் செலுத்தி எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 26 வாகனங்களில் உரிமையாளா்கள் முன்வராததால் மே 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள நாமக்கல் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.