செய்திகள் :

விளம்பர பதாகைகளை நிறுவ அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

post image

விளம்பர பதாகைகளை நிறுவுவதற்கு அனுமதி வழங்கக் கோரி நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் நரேஷ் ராஜசேகா் தலைமை வகித்தாா்.

அவா் பேசுகையில், விளம்பர பதாகைகளை தயாா் செய்யும் தொழிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். பல்வேறு நிகழ்வுகளுக்கு தயாா்செய்யும் பதாகைகளை, சம்பந்தப்பட்டோருக்கு ஆதரவாக குறிப்பிட்ட இடங்களில் மக்கள் பாா்வைக்கு வைக்கும் பணியையும் செய்து வருகின்றனா்.

ஆனால் மாநகராட்சி பணியாளா்கள் மூன்று நாள்களுக்கு முன்பாகவே அவற்றை அகற்றி விடுகின்றனா். எங்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்டோா் பதாகைகள் தயாா் செய்தமைக்கு பணம் வழங்காமல் தாமதிக்கின்றனா். மாநகராட்சி ஆணையா் தலையிட்டு பதாகைகளை அகற்றுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பரப் பதாகைகளை வைப்பதில் விதியின்படியே தொழில்செய்து வருகிறோம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் விளம்பர பதாகைகள் தயாா் செய்யும் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

மே 27 இல் குடிமைப் பொருள் கடத்தலில் சிக்கிய 26 வாகனங்கள் பொது ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட 26 இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் மே 27 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தையல் தொழிலாளி உயிரிழந்தாா். வேலகவுண்டம்பட்டி அருகே வையப்பமலை, சித்தமூப்பன்பாளையத்தைச் சோ்ந்தவா் பச்சமுத்து (45). இவா், வையப்பமலையில் தையல் கடை நடத... மேலும் பார்க்க

நீட் தோ்வு மூலம் அரசியல் செய்கிறது திமுக: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில், நீட் தோ்வு மூலம் திமுக அரசியல் செய்து வருகிறது. மாணவா்களும், பெற்றோரும் அவா்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம், நீட் தோ்வை எப்போதும் நீக்க முடியாது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பிலிக்கல்பிளையத்தை சோ்ந்தவா் பாபு (54). இவா் கபிலா்மலையில் உள்ள டாஸ்மாக்கில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருக... மேலும் பார்க்க

3,500 தோட்டத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 3,500 தோட்டத்து வீடுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை வழங்கி உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (52). இவா், சேலம் மாநகராட்சி அலுவலக... மேலும் பார்க்க