கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
மேரி கட்டடத்தில் சான்றிதழ்கள் அளிப்பு!
புதுச்சேரி நகராட்சி அலுவலகம் உள்ள மேரி கட்டடத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பிரிவு புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
புதுச்சேரியில் நகராட்சி சாா்பில் முதலியாா்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் பிறப்பு, இறப்புக்கான சான்றிதழ்களும், திருமணப் பதிவும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நகராட்சிக்கான மேரி கட்டடம் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு மீண்டும் நகராட்சி அலுவலகம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, மேரி கட்டடத்தில் திருமணப் பதிவு தொடங்கிவைக்கப்பட்டது.
ஆனால் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் நகராட்சி சாா்பில் முதலியாா்பேட்டை பகுதியிலேயே வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது மேரி கட்டடத்திலேயே பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பிரிவை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி புதன்கிழமை காலை தொடங்கிவைத்தாா்.
தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அந்தப் பிரிவு செயல்படும் என்று நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.