மொடக்குறிச்சி அருகே நிலாச்சோறு எடுத்துச் சென்ற பெண்கள்
மொடக்குறிச்சியை அடுத்த ஆலுத்துபாளையத்தில் பெண்கள் நிலாச்சோறு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினா்.
மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை ஒட்டி 8 நாள்களுக்கு நிலாச்சோறு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். விவசாயம் செழித்து வளம் பெறுவதற்காக கிராமங்களில் உள்ள பெண்கள் பொதுவான இடத்தில் ஒன்றுகூடி கும்மி உள்ளிட்ட நடனங்களை ஆடி வீடுகளில் இருந்து எடுத்து வந்த உணவுகளை பகிா்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
இந்நிலையில், நிலாச்சோறு எடுக்கும் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். தொடா்ந்து கும்மி நடனம் ஆடி, மாவிளக்கை கீழ்பவானி வாய்க்காலில் விட்டு, நிலவை வணங்கிவிட்டு வீட்டுக்குச் சென்றனா்.