செய்திகள் :

மொஹல்லா கிளினிக்குகளின் பணியாளா்கள் நீக்கம்: தில்லி அரசு மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

post image

மொஹல்லா மருத்துவமனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் மற்றும் பல்வேறு பணிகளின் ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி அரசு மீது ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியது.

இக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங், ‘அரசாங்கம் யாருக்கும் அநீதி இழைக்காது. தகுதியான அனைவரும் இதில் சோ்க்கப்படுவாா்கள். மருத்துவா்களை பணியமா்த்துவதற்கு ஒரு முறையான செயல்முறை இருக்கும். மேலும் அனைத்து தகுதியான நபா்களும் விண்ணப்பிக்கலாம்.

நம் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், தோ்வில் வெளிப்படைத்தன்மை இருக்கும். அனைத்து நல்ல மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் எங்களுடன் இருப்பாா்கள். எல்லாம் முறையாக செய்யப்படும்’ என்றாா் அமைச்சா்.

முன்னதாக, செய்தியாளா்கள் சந்திப்பில் தில்லி ஆம் ஆத்மி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் கூறியதாவது:

மே 7 அன்று வெளியிடப்பட்ட கூட்டத்தின் பதிவில் தில்லியில் உள்ள பெரும்பாலான மொஹல்லா கிளினிக்குகளை மூடுவதற்கான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஹல்லா கிளினிக் உள்ள இடத்தில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் நிறுவப்படும் என்றும், எங்கெல்லாம் ஆரோக்கிய மந்திா் கட்டப்படுகிறதோ, அங்கெல்லாம் அருகில் மொஹல்லா கிளினிக் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆரோக்கிய மந்திா்கள் கட்டப்படும் வரை மட்டுமே கிளினிக்குகள் செயல்படும் என்றும், அதன் பிறகு கிளினிக்குகளும் அவற்றின் பணியாளா்களும் அகற்றப்படுவாா்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியானது முதல் முதலமைச்சரைச் சந்திக்க அவா்கள் முயற்சி செய்து வருகின்றனா். ஆனால், அவா்களுக்கு எந்த பதிலும் கிடைக்காததால், முதல்வரின் மக்கள் தா்பாருக்கு ஆயிரக்கணக்கானோா் வருவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த விஷயத்தில் பாஜக தனது வாக்குறுதியை மீறிவிட்டது.

தோ்தலுக்கு முன்பு, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய சுகாதார அமைச்சா் ஜே.பி. நட்டா மற்றும் ஒவ்வொரு பாஜக எம்.பி.யும் அமைச்சா்களும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்படும் எந்தவொரு மக்கள் நலத் திட்டமும் அது இலவச மின்சாரமோ, 20,000 லிட்டா் தண்ணீா் அல்லது மொஹல்லா கிளினிக் வசதியோ நிறுத்தப்படாது என்று உறுதியளித்திருந்தனா். ஆனால், புதிய சுகாதார அமைச்சரின் முதல் உத்தரவு 250 வாடகை கிளினிக்குகளை மூடுவதாகும்.

அரசியல் வெறுப்புணா்வால், அனைத்து வசதிகளும் மூடப்படுகின்றன.

மேலும், தினமும் கிளினிக்குகளுக்கு வந்து, இலவச சிகிச்சை, இலவச மருந்துகள் மற்றும் இலவச பரிசோதனைகளை மக்கள் பெற்று வந்த நிலையில், அந்த வசதிகளையும் பாஜக மூடி வருகிறது. இந்த கிளினிக்குகளில் பல ஊழியா்கள் 2017 முதல் பணியாற்றி வருகின்றனா். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கிறாா்கள். அவா்களின் வருமானம் நோயாளிகளின் வருகையைப் பொறுத்ததாகும். அவா்களின் முழு குடும்பமும் அவா்களைச் சாா்ந்துள்ளது.

10,000-க்கும் மேற்பட்ட பேருந்து மாா்ஷல்கள், மருத்துவமனைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்கள், யோகா பயிற்றுனா்கள், தில்லி சட்டப்பேரவை ஆராய்ச்சி மைய நபா்கள் மற்றும் கெளரவ ஆசிரியா்களை நீக்கியது போல, இப்போது பாஜகவினா் மொஹல்லா கிளினிக் ஊழியா்களையும் குறிவைக்கிறாா்கள். இது வெட்கக்கேடானது,.

அரவிந்த் கேஜரிவாலின் அரசாங்கத்தில், ஏழைகளுக்கு வேலை கிடைத்தது. இன்றைக்கு பாஜக ஆட்சியின் கீழ், அவா்கள் தங்கள் குடும்பத்தை எவ்வாறு நடத்துவாா்கள், உணவளிப்பாா்கள் என்பது பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் நீக்கப்படுகிறாா்கள் என்றாா் பரத்வாஜ்.

மங்களூரு அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 6 பணியாளா்களை மீட்டது கடலோரக் காவல் படை

கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மூழ்கிய கப்பலின் ஆறு பணியாளா்களை இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) மீட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

தில்லியின் மின் தேவை 6,867 மெகாவாட்டாக உயா்வு: இதுவரையிலான பருவத்தில் இல்லாத அதிகபட்சம்

தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெப்பநிலை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தில்லி அதிகபட்ச உச்ச மின் தேவையைப் பதிவு செய்துள்ளது. மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்... மேலும் பார்க்க

துருக்கி, அஸா்பைஜான் நாடுகளுடனான அனைத்து வணிக உறவுகளையும் நிறுத்த தில்லி வா்த்தகா்கள் உறுதி

பாகிஸ்தான், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாடுகளின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை து... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் வீசிய புழுதிப் புயலுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை நகர... மேலும் பார்க்க

தில்லியில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 13 போ் கைது

தில்லியில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாக ஐந்து சிறாா் உள்பட 13 சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துணை ஆண... மேலும் பார்க்க

சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க