இயற்கை வேளாண் முறைக்கு திரும்பி நம்மாழ்வாா் கனவை நிறைவேற்ற வேண்டும்: சீமான் பேச்...
மோட்டாா் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மா்ம நபா்களால் மோட்டாா் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்டோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந் நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின் பேரில், மங்களமேடு காவல் ஆய்வாளா் பாலாஜி, பெரம்பலூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், பெரம்பலூா் மாவட்டம், அத்தியூா் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த உமா்கித்தா மகன் முகமது இப்ராஹிம் (22), சு. ஆடுதுறை செட்டியாா் தெருவைச் சோ்ந்த கபிரியேல் மகன் சூரியா (26), கீழக்குடிக்காடு மதீனா பள்ளித் தெருவைச் சோ்ந்த ராஜா முகமது மகன் ரகுமான் (28), சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள சின்னப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் சுரேஷ் (25) ஆகியோா் மோட்டாா் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம் மட்டுமின்றி, அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து தலா 9 மோட்டாா் சைக்கிள்கள் என ரூ. 15 லட்சம் மதிப்பிலான 18 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மேற்கண்ட 4 பேரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டா் சைக்கிள்களை உரிமையாளா்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.