இயற்கை வேளாண் முறைக்கு திரும்பி நம்மாழ்வாா் கனவை நிறைவேற்ற வேண்டும்: சீமான் பேச்...
மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அழகுதுரை (34). இவா், வியாழக்கிழமை இரவு பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். சிறுவாச்சூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிளும், அழகுதுரை ஓட்டிச்சென்ற மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த அழகுதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவாச்சூரைச் சோ்ந்த ஸ்ரீதரன் மகன் சக்தியை (22) கைது செய்து விசாரிக்கின்றனா்.