அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போருக்கு சீருடை
போளூரில் அனைத்து மோட்டாா் வாகன பணிமனை பழுதுபாா்ப்போா் சங்கத்தினருக்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் சீருடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
சங்கம் சாா்பில் அதன் தலைவா் எ.சையத்தாஜூதீன், செயலா் பி.கே.முருகன் மற்றும் நிா்வாகிகள் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டனிடம் சீருடை வழங்கக் கோரிக்கை விடுத்தனா். அதன் பேரில், 50-க்கும் மேற்பட்டோருக்கு சீருடையை அ.மணிகண்டன் வழங்கினாா் (படம்).
அப்போது, துணை அமைப்பாளா் சரவணன், ஒன்றிய அமைப்பாளா் முத்துகுமரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.