செய்திகள் :

யு19 தெற்காசிய கால்பந்து: கோப்பையை தக்கவைத்தது இந்தியா!

post image

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில், இந்தியா 2-ஆவது முறையாக கோப்பை வென்றது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடப்பு சாம்பியன் இந்தியா - வங்கதேசம் மோதிய இறுதி ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி கிக் வாய்ப்பில் இந்தியா 4-3 கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. கடந்த 2023-இல் இந்தியாவே சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான 7-ஆவது தெற்காசிய அளவிலான கால்பந்து போட்டி அருணாசல பிரதேசத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியா, வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை என 6 அணிகள் இதில் பங்கேற்றன. அவை தலா 3 அணிகள் வீதம், இரு குரூப்களாக பிரிக்கப்பட்டன.

குரூப் சுற்று முடிவில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை நாக்அவுட் சுற்றுக்குத் குதிபெற்றன. அரையிறுதியில் இந்தியா 3-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளையும், வங்கதேசம் 2-1 கோல் கணக்கில் நேபாளத்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

இந்தியா - வங்கதேசம் மோதிய விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், 2-ஆவது நிமிஷத்திலேயே இந்திய கேப்டன் சிங்காமயும் ஷமி ஸ்கோா் செய்தாா். இந்த முன்னிலையை முதல் பாதியில் இந்தியா அப்படியே தக்கவைத்தது.

2-ஆவது பாதியிலும் இதே நிலை நீடிக்க, 61-ஆவது நிமிஷத்தில் வங்கதேசத்தின் முகமது ஜாய் அகமது கோலடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என சமனிலை கண்டது. எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெற இரு அணி வீரா்களும் முயற்சிக்க, அதற்கு பலன் கிடைக்காமல் போனது.

இதனால் ஆட்டம் டிராவில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க பெனால்ட்டி கிக் வாய்ப்பு கையாளப்பட்டது. இதில் இந்தியா 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது.

'நம்பவே முடியவில்லை...’ இன்ப அதிர்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரை... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலியைப் பாராட்டிய ராஜமெளலி!

நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்குநர் ராஜமெளலி பாராட்டியுள்ளார்.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1ஆம் தேதி வெள... மேலும் பார்க்க

தக் லைஃப் - இரண்டாவது பாடல் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனின் புதிய படமான ’தக் லைஃப்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தே... மேலும் பார்க்க

கசாப்பு கடையா வச்சுருக்கேன்? ’பெரிய பாய்’ என்ற பெயருக்கு ரஹ்மான் ரியாக்‌ஷன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை புனைப்பெயர் வைத்து அழைப்பதற்கு அவர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், இன்று உலகளவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.... மேலும் பார்க்க

இத்தாலி கிராண்ட் ப்ரீ: வொ்ஸ்டாபென் வெற்றி

ஃபாா்முலா ஒன் காா் பந்தயத்தின் நடப்பு சீசனில் 7-ஆவது ரேஸான இத்தாலி கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.நடப்பு சாம்பியனான வொ்ஸ்டாபெனுக்கு, ந... மேலும் பார்க்க

வாகை சூடினாா் அல்கராஸ்!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றாா். இறுதிச்சுற்றில் அவா், 7-6 (7/5), 6-1 என்ற நோ் செட்களில், உலகின் நம்பா் 1 வீரரு... மேலும் பார்க்க