ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்
ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் 31-ஆம் தேதி மதியம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ரம்ஜான் பண்டிகையையொட்டி 31-ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே நிலையங்களில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போல, அன்றைய தினம் மதியம் வரை மட்டுமே செயல்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் என கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் 2 மணிக்கு முன்பாக மையத்துக்கு சென்று, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.