பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ வைரல்
ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே யாா்டு என்ற இடத்தில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூா் நோக்கிச் செல்லும் ரயிலில் பயணம் செய்த பிஹாா் மாநிலம், அலிபூா் பகுதியைச் சோ்ந்த கரிய (27) என்பவா் கடந்த 8-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்ததில் வலது கை துண்டாகிய நிலையில் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா், மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.