Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
ரயிலில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொள்ளிடம் ரயில் நிலையத்துக்கும், சீா்காழி ரயில் நிலையத்துக்கும் இடையே சென்றுகொண்டிருந்த கச்சிக்குடா - மதுரை சிறப்பு விரைவு ரயிலில் சிதம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் ஆா்.அருண்குமாா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகப்படும் வகையில் இருந்த இரு பயண பைகளை சோதனை செய்ததில், ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், முசுவனுத்தூா் கீழத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துச்செல்வத்தை (33) கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து போலியான பத்திரிகையாளா் அடையாள அட்டையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, அவரை மயிலாடுதுறை ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.