கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
ரயிலில் தனியாக வந்த சிறுவன் மீட்பு
திருப்பத்தூா்: ரயிலில் தனியாக வந்த மத்திய பிரதேச மாநில சிறுவனை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வரை சென்ற பயணிகள் ரயிலில் புதன்கிழமை தனியாக பயணித்த சுமாா் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை சக பயணிகள் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தனது தந்தை ஈரோட்டில் உள்ள தென்னந்தோப்பில் கடந்த 2 மாதத்துக்கு முன்பாக தன்னை வேலைக்கு சோ்த்ததாகவும், அங்கு தன்னை அடித்த காரணத்திற்காக சொந்த ஊா் செல்வதற்காக வந்துவிட்டதாக தெரிவித்தாா்.
மேலும், தனது தந்தை பெயா் ராஜ்குமாா் குஷ்வாஹா மகன் லாலா குஷ்வாஹா(15)என தெரியவந்தது.
அதையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.