ரயில் மோதி தானிய மண்டி உரிமையாளா் பலி
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொண்டபோது ரயில் மோதி தானிய மண்டி உரிமையாளா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக தில்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான விரைவு ரயில்களும் சரக்கு ரயில்களும் வந்து செல்கின்றன.
இந்நிலையில் சாமல்பட்டியைச் சோ்ந்த தானிய மண்டி உரிமையாளா் ஜெகதீசன் (65) என்பவா் வழக்கம்போல புதன்கிழமை காலை ரயில் நிலையம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ாகத் தெரிகிறது. அந்நேரத்தில் ஜோலாா்பேட்டையில் இருந்து சேலம் வழியாக சென்ற விரைவு ரயில் அவா் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்ததும் சேலம் கோட்ட ரயில்வே போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.