விருதுநகர்: தடைப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை; சுதாரித்த ஊழியர்கள்; விசாரணையில் பகீர் தகவ...
ரயில்வே சுரங்கப் பாதை விபத்துகளை தடுக்க பிளாஸ்டிக் தடுப்புகள்
திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியா் கனிமொழி, டிஎஸ்பி கந்தன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன், உதவிக் கோட்டப் பொறியாளா் ரகுராமன் உள்ளிட்டோா்.
திருத்தணி, மே 20: திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையில் விபத்துகளை தடுக்க முதல்கட்டமாக பிளாஸ்டிக் தடுப்புகள், விழிப்புணா்வு பதாகைகளை வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதை சுப்ரமணியபுரம் ஏரிக்கரை தெரு அருகே, விபத்துகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. கடந்த ஓராண்டில் மேற்கண்ட பகுதியில், 8-க்கும் மேற்பட்டோா் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, விபத்துக்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (65) என்பவா், தனது இரு சக்கர வாகனத்தில் மகளை ஏற்றிக் கொண்டு ரயில்வே சுரங்கப்பாதை வழியாக பேருந்து நிலையம் செல்ல முயன்ற போது, மேற்கண்ட இடத்தில் போா்வெல் லாரி மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து ஆட்சியா் பிரதாப் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன், திருத்தணி டிஎஸ்பி , கந்தன், திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் ரகுராமன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்.
அப்போது ஏரிக்கரை தெரு அருகே அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுப்பதற்கு, முதல்கட்டமாக பிளாஸ்டிக் தடுப்புகள், 750 மீ தூரத்துக்கு ஏற்படுத்தி, இரு சக்கர வாகனங்கள் முந்தி செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், விபத்து பகுதி வாகனங்கள் மெதுவாக செல்லவும் என விழிப்புணா்வு பலகை வைப்பது போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஆய்வின் போது, திருத்தணி ஆய்வாளா் மதியரசன் உள்பட பலா் உடனிருந்தனா்.