செய்திகள் :

ராகுல், மோடி, அமித் ஷாவை நேர்மையற்றவர்களாகச் சித்திரித்த ஆம் ஆத்மி!

post image

தில்லியில் ராகுல் காந்தி உள்பட பாஜகவினரையும் நேர்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டு ஆம் ஆத்மியினர் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

தில்லியில் பிப்ரவரி 5 ஆம் தேதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சியினரை விமர்சித்து ஆம் ஆத்மியினர் சுவரொட்டிகளை மாநிலம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அதில் பாஜகவினர் உள்பட ராகுல் காந்தியையும் நேர்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். சுவரொட்டியில் ராகுல் காந்தி உள்பட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அனுராக் தாக்கூர், வீரேந்திர சச்சதேவா, பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, சந்தீப் தீட்சித், அஜய் மக்கான் உள்ளிட்டோரின் படத்துடன் ’அனைத்து நேர்மையற்றவர்களையும் கேஜரிவாலின் நேர்மை வெல்லும்’ என்ற வாசகத்துடன் குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே, ஆம் ஆத்மியினரின் சுவரொட்டிக்கு பதிலளிக்கும் விதமாக கல்காஜி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அல்கா லம்பா கூறியதாவது, ’’அரவிந்த் கேஜரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவர் இந்தியா கூட்டணியைவிட்டு விலகுவதாக அறிவிப்பாரா? மக்களவைத் தேர்தலின்போது, கூட்டணிக்காக ஆம் ஆத்மிதான் காங்கிரஸ் கட்சியை வேண்டியது. ஆனால், தில்லியில் ஆம் ஆத்மி கூட்டணியுடன் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது தவறு. அவர்களால்தான், காங்கிரஸ் வெற்றியை இழந்தது. கேஜரிவால்தான் 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு வழங்கி விட்டார்’’ என்று தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘’பாஜகவும் ஆம் ஆத்மியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; அவர்களிடையே எந்த வித்தியாசமும் இல்லை. பாஜகவின் பி அணிதான் ஆம் ஆத்மி’’ என்று கூறினார்.

இதையும் படிக்க:சிறையில் எப்படியிருக்கிறார் மிக இளம்வயது மரண தண்டனைக் கைதி கிரீஷ்மா?

குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி!

பிகாரில் குரங்கு ஒன்று மாடியில் இருந்து தள்ளிவிட்டதால் கீழே விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள மகர் கிராமத்தில் வசித்து வந்த ம... மேலும் பார்க்க

மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்களின் பணி நியமன ஊழல் வழக்கில் கொல்கத்தா நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மனுக்களை ஜன. 27 முதல் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந... மேலும் பார்க்க

தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!

தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற பிப். 5 அன்று நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கம்!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கில் புதிய சிக்கல்! கைரேகைகள் பொருந்தவில்லை!

மும்பையில் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் குற்றவாளியுடன் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளது. சைஃப் அலிகான் இல்லத்தில் சேகரிக்கப்பட்ட 19 கை... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கில் திருப்பம்... குற்றவாளியின் கைரேகை பொருந்தவில்லை!

நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கைரேகை , அவரது வீட்டில் பதிவான ரேகையுடன் பொருந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் கடந்த... மேலும் பார்க்க