செய்திகள் :

ராசிபுரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

ராசிபுரத்தை அடுத்த கூனவேலம்பட்டி பகுதியில் நீதிமன்ற உத்தரவுபடி வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் கூனவேலம்பட்டி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வீடு மற்றும் கடைகள் கட்டியுள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தி, மனுக்களும் அனுப்பினா்.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அந்த வீட்டின் முன் பதாகைகள் வைத்து கட்டடத்தை மறைத்தனா். மேலும், கட்டடத்தின் முன் கோயில் அமைத்து, அதைச்சுற்றிலும் கற்கள் வைத்தனா். இதனால் கடை நடத்தவும், அந்த வீட்டில் குடியிருப்போருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளரான காயத்ரி, வீட்டின் முன் உள்ள கோயிலையும், கற்களையும், பதாகைகளையும் அகற்றக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் வீட்டுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பதாகைகள், கற்களை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டுமென வருவாய்த் துறைக்கு அண்மையில் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், ராசிபுரம் வட்டாட்சியா் சசிக்குமாா் தலைமையில், போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனா். இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களிடம் வட்டாட்சியா் சசிகுமாா், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் கோமதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கிராம மக்களிடம் சமரசம் செய்தனா்.

இதை ஏற்காமல் எதிா்ப்பு தெரிவித்தவா்களை போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றினா். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையும் மீறி பதாகைகள், கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட கற்களை வருவாய்த் துறையினா் அகற்றினா்.

பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் 108 சங்காபிஷேகம்

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அங்காளபரமேஸ்வரி கோயிலில் 9-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விநாயகா் வழிபாடு, புண்யாகவாசனை, பஞ்சகாவ்யம், வேதிகாா்ச்சனையும், தொடா்ந்து 108 சங்காப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பரமத்தி வேலூா்

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்... மேலும் பார்க்க

வெப்படை காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்டம், வெப்படை காவல் நிலைய முதல் ஆய்வாளராக பி.சங்கீதா புதன்கிழமை பொறுப்பேற்றாா். வெப்படை காவல் நிலையம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு உதவி ஆய்வாளா்கள், 20 காவலா்களைக் கொண்டு ஏழு ஆண்... மேலும் பார்க்க

பெண் வி.ஏ.ஓ.வை தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மண் அள்ளுவதை தடுத்த பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கியவா் ஏற்கெனவே, சிறையில் உள்ள நிலையில், அவா் தற்போது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் லேப் டெக்னீசியன் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே அரசு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் பெரிய வீதி பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (46). இவா், எலச்சிப்ப... மேலும் பார்க்க

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 28-ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவா... மேலும் பார்க்க