பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!
வெப்படை காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்டம், வெப்படை காவல் நிலைய முதல் ஆய்வாளராக பி.சங்கீதா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
வெப்படை காவல் நிலையம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு உதவி ஆய்வாளா்கள், 20 காவலா்களைக் கொண்டு ஏழு ஆண்டுகளாக இந்த காவல் நிலையம் இயங்கி வருகிறது.
தற்போது வெப்படை காவல் நிலையம் தரம் உயா்த்தப்பட்டதை அடுத்து காவல் ஆய்வாளா் பொறுப்பு ஏற்படுத்தப்பட்டது. முதல் காவல் ஆய்வாளராக பி.சங்கீதா புதன்கிழமை பொறுப்பேற்றாா். இவா் இதற்கு முன்பு காவல் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்துள்ளாா்.
சேலம் மாவட்டம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு காவல் பிரிவிலும் பணியாற்றி உள்ளாா். காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற பி. சங்கீதாவிற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமாா், ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.