ராஜபாளையத்தில் பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில பாஜக தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் ஜவஹா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டத் தலைவா் ராஜா என்ற சரவணன் துரை தலைமை வகித்தாா். தெற்கு நகரத் தலைவா் பிரேம ராஜா, வடக்கு நகரத் தலைவா் ஜெமினி சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதில் பொதுச் செயலா் தங்கராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் ஞானபண்டிதன், விவசாய அணி மாநில துணைத் தலைவா் திருநாவுக்கரசு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. வினரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.