ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சந்திரகலா, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 417 மனுக்களைப் பெற்று, உரிய அலுவலா்களுக்கு பரிந்துரை செய்தாா். மேற்கண்ட கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து 1 பயனாளிக்கு ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து ரூ.5,800/- மதிப்பிலான தையல் இயந்திரத்தையும், கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு உடனடியாக மனுவை பரிசீலித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவியையும் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.