உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா! பெரும் நிதியிழப்பு ஏற்படும்...
ராணிப்பேட்டையில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில்மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) நடைபெறும் என கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மின் பகிா்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் செவ்வாய்க்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதம் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) காலை 10.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூா் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மின்நுகா்வோா் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் அளித்து நிறைவேற்றிக் கொள்ளலாம்.