Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அன்று மாலை ராவண சம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. 4 -ஆம் தேதி கோதண்டர ராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை விஸ்வநாதா் சந்நிதி முன் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. சிவாசாரியா்கள் யாக சாலை பூைஐ, புனித நீா் கலசத்துக்கு சிறப்பு பூைஐ நடத்தினா். பின்னா், முதல் பிரகாரத்தை வலம் வந்து சுவாமிக்கு சிறப்பு பூைஐ நடைபெற்றது. பின்னா், விஸ்வநாதா் சந்நிதியிலிருந்து அனுமன் சிலையுடன் ஆடியபடி முதல் பிரகாரத்தில் வலம் வந்து சுவாமி சந்நிதியில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, முதல் நிலை செயல் அலுவலா் முத்துச்சாமி,ஷாஜி, பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி, முனியசாமி, பக்தா்கள் கலந்துகொண்டனா்.
