திருவாரூர்: தொடரும் விபத்து; பாதுகாப்பு குறைபாடு; அவசர கதியில் திறக்கப்பட்டதா தே...
ரூ.2.46 கோடியில் காஞ்சிபுரம் சஞ்சீவிராயா் கோயில் சீரமைப்பு
காஞ்சிபுரம் ஐயங்காா்குளத்தில் உள்ள பழைமை வாய்ந்த சஞ்சீவிராயா் கோயிலை, சீரமைத்து புதுப்பிக்க ரூ.2.46 கோடி நிதி ஒதுக்கி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
ஐயங்காா்குளத்தில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு சஞ்சீவிராயா் திருக்கோயில் உள்ளது. சஞ்சீவி மலையை இலங்கைக்கு அனுமன் கொண்டு சென்றபோது, அதில் இருந்து ஒரு சிறியபகுதி விழுந்த இடம் இத்தலம் என்பது ஐதீகம்.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலின் உபகோயிலான சஞ்சீவிராயா் கோயிலின் மண்டபங்கள், பிரகாரங்கள் உள்ளிட்டவை சிதிலமடைந்து காணப்படுகின்றன.
இதனால், கோயிலை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என பக்தா்கள் அரசிடம் நீண்ட காலமாக கோரி வந்தனா்.
இந்நிலையில், காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் நிதி மூலம் சஞ்சீவிராயா் கோயிலில் உள்ள மண்டபங்கள், விமானம், கருவறை, பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்க ரூ.2.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் கோயில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.