US Strike: 'ஏமன் மீது அமெரிக்க நடத்திய மிகப்பெரிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு'...
ரூ. 375 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டுப் பெண்கள் கைது!
கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில், இரு பெண்களைக் கைது செய்த மங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தில்லியில் இருந்து பெங்களூருக்கு விமானம் வழியாக மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பெரியளவில் விநியோகம் செய்ய தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகிலுள்ள நீலாத்ரி நகரில் அவர்களிடம் இருந்து ரூ.375 கோடி மதிப்புள்ள 37.870 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரூ. 2,18,460 பணம் , 4 மொபைல் போன்கள், 2 பயணப் பைகள், 2 பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அடோனிஸ் ஜபுலைல் (31), அபிகேல் அடோனிஸ் (30) ஆகிய இருவரும் தில்லியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கைது சம்பவத்தில் முதன்முதலாக மங்களூர் பகுதியில் 15 கிராம் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மங்களூர் கிழக்கு காவல்துறையினர் ஹைதர் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
சிசிபி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு பெங்களூரில் உள்ள பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்க வழிவகுத்தது.
இதையும் படிக்க | முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது: நிதின் கட்கரி
மேலும், இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் இகேடி பெலோன்வு என்பவர் கைது செய்யப்பட்டு 6.248 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் தொடர்ந்து விசாரித்தபோது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்க பெண்கள் குறித்து தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 14 அன்று இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.