ரூ.4.95 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடக்கி வைத்தாா்!
வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.95 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துரை, கை.களத்தூா் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சா் சிவசங்கா், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பெரியாம்மாபாளையம் ஊராட்சியிலும், தொண்டமாந்துறை விஜயபுரம் கிராமத்திலும் தலா ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் என மொத்தம் ரூ. 4.95 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளா் பாண்டியன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.